மொத்தப் பக்கக்காட்சிகள்

12.29.2010

                         உங்கள் குழந்தையைத் தெரிந்துக்கொள்ள------ கவிதை
                                                                அருணா  ராகவன்
                                                                                                   மொழியாக்கம் ;  குப்பு. வீரமணி
              
                       கவிதைகளைப் பற்றிபேச, குழந்தைகள் மிகவும் சிறியவர்கள் என்று நினைக்கிறவரா நீங்கள்? மாற்றிக்கொள்ளுங்கள்  உங்கள் நினைப்பை.  அந்தப்  புதிய கள்ளங்கபடமற்ற  சின்னஞ்சிறு  உள்ளங்கள்,  கவிதையின் முழுப் பரிமாணத்தையும்  நாம் அதிரத்தக்க  வகையில் வெளிக்கொணர  கூடியவை. அவர்களது கற்பனையில் மிகவும் சாதாரண விஷயத்தைக்  கூட, மிகப்  பரந்து விரிந்த மாறுப்பட்ட சிகரங்களையும்
தமது கற்பனைத் திறத்தால்  அளந்தறிய  வல்லவர்கள்.
                                                ----------------------------------------
                              நாமெல்லாம்  பிக்மேலியன்கள்  எனலாம் . நமது குழந்தைகளை  ( நமது  ஆசைக்கேற்ப ) உருவா  க்க, செம்மைப்படுத்த, தட்டி-கொட்டி  அசைத்து, தலையைத் திருப்பி சாய்த்துப் பார்த்து, இப்படி  என்னென்னவெல்லாமோ செய்கிறோம் .  நமது  பக்கத்து வீட்டுக்  குழந்தைதான்  -  அது ஒரு வாரம் நம்மிடம்  ஒட்டிக்கிட்டு இருக்கிறவரை  ---ரொம்ப சமத்து . குழந்தைக்கு  மழையில்  நனையப்   பிடிக்கிறபோது  நமக்கு வெயில்தான்  பிடிக்கும். தோட்டத்துச்  சேற்றில்   சளக்---புளக்' குனு  குதிக்க குழந்தை  விரும்பும்போது  நமக்கு சுத்தமான உலர்ந்த சிமிண்டுத் தரையில்  நடைபோடப்
பிடிக்கும். தேநீர்க்  கோப்பையிலிருந்து  சிந்தாமல்  சிதறாமல் அமெரிக்கையாக  டீ குடிக்கத்தான் நமக்கு பிடிக்கும்.  அவனுக்கோ கப்புக்குள்  வாயால் ஊதி குமிழ் கிளப்பி சாசரில்  சிதறவிடப் பிடிக்கும். சுருக்கமா சொல்லனும்னா  நமக்கு நம்  குழந்தைகள்  பெரிய தலைவலி . ஏனெனில்  அவனுக்கு விருப்பமில்லேன்னாலும்,  நமது பேச்சுக்குக்  கட்டுபட்டோ  கூட  அவன் சிமென்ட் தரையில் நடக்கலாம்.  நாமோ  வேடிக்கைக்காகவோ, விருப்பபட்டோ கூட சளக் -- புளக் 'னு சேற்றில்  நடக்கிறதில்லே.

            அண்மையில்  வகுப்பறையில்  மிகவும்  மாறுப்பட்டதொரு கவிதையை கேட்டேன்.
          நான்  இன்னிக்கு  என்னோட வேலையைச்  செய்யத்தான  நினைத்தேன். 
        ஆனால், பழுப்பு  பறவையொன்று ஆப்பிள் மரத்திலிருந்து  பாடியது,
         வண்ணத்துப் பூச்சியொன்று  வெளியில் குறுக்காகக்  கடந்தது .
         இலைகளெல்லாம்  என்னை அழைகின்றன,
         புல்வெளியின் மேல்  பெருமூச்செறிந்து பரவிச்  சென்ற காற்று
          புற்களை இங்கும் அங்குமாய் அசைத்தது .
          வானவில் தனது பளபளப்பான  கைகளை  நீட்டுகிறது,
          அப்புறமென்ன,
          நான் சிரித்துக்கொண்டே  வெளியே  போகாமால் 
          வேறென்ன  செய்வதாம்?                 
                                                                                         ரிச்சர்ட்  லே  கல்லியேன்.

  நாங்கள்  அந்தக்  கவிதையின்  நலம் பாராட்டி ஒரு  திறனாய்வு  செய்தோம். எளிய  சில கேள்விகளை  எழுப்பினோம்.                                                 
                    '  அப்போ என்ன   நேரம் ?  எந்த  சீசன்னு  நினைக்கிறாங்க ?  அந்தக் கவிஞன்  ஆப்பிள் மரத்தைப்  பார்த்திருக்க  முடியுமா ? ' அது ' எப்படி  அவர்களுக்குத்  தெரியும் ? இவற்றுடன் அவர்களது  கற்பனைத்  திறனை  ஊக்குவிக்க, ' அந்த கவிஞன் அமர்ந்து வேலை  செய்துக் கொண்டிருந்த அறையைப் பற்றி சொல்லுங்க'னும் கேட்டோம். குழந்தைமையுடன், தெளிவாக , வியப்பூட்டும்  வகையில் அவ்வளவு பதில்கள் வெளிவந்தன.'  ஏன் அந்த  அறை  மேசையின்  வடிவத்தைக் கூட  விவரித்தார்கள். ( ரொம்ப  பெரியதில்லை தாள்களும் கையெழுத்து  படிகளுமாக மேசை நிறைய குப்பை ) பெரிய பெரிய பூப்போட்ட  திரைசீலைகள்  பிறகு  அந்தக்  கவிஞனின் மேசையில் டைப்ரைட்டரா கம்ப்யூட்டரா  என்பது பற்றி விவாதம்,  அவர்கள் பகுப்பாய்வு  செய்ய  வாய்ப்பாக, அவர்கள்  கண்முன்னே  என்னவிதமான  காட்சி தெரிகிறது  என்று கேட்கப்பட்டது .  கிராமமா , நகரமா, நகரத்தை ஒட்டிய பகுதியா  அவரவர் கருத்தை  நிலைநாட்ட  நிறைய  குறிப்புகளை  அவரவரும்  முன்  வைத்து  நீளமாக  உரையாடினர்.
                  
               இன்னும்  கொஞ்சம்  நெருக்கமா  சில கேள்விகள்  எழுப்பப்பட்டன . " தனது  வேலைகளை ஒதுக்கி வைத்ததற்காக  அந்தக்  கவிஞன்  குற்றவுணர்வுக்கு  ஆளாகி இருப்பானா ? இதற்கு முன்னாலும்  இப்படி செய்திருப்பானா ? இவர்களுக்கு  எப்படி இது  தெரியும் " என்று கேட்டோம் .  இயற்கை  அவர்களை எப்போதேனும்  வெளியே  வருமாறு  அழைத்ததாக  உணர்ந்துள்ளார்களா? " நிச்சயமாக  "  என்று  அழுத்தம்  திருத்தமாக  பதிலளித்தார்கள் .  அப்போது,  அவர்கள் என்ன செய்தார்கள் ?  அவ்வளவுதான்; உணர்வுகளை  கட்டுப்படுத்தவே  முடியவில்லை . எப்படி வந்தது  தெரியுமா ?  கலகக்காரர்கள் , கத்தினார்கள். இந்த கலகக்காரர்கள்  இப்படி தான்  லே  கல்லியேன்  ஒதுக்கிவைத்துவிட்டப்போது   கவிதையானது .  நாங்கள் இதை  விட மோசமா எதுனா  செய்திருப்போம். என்ன லே கல்லியேன் கவிதை எழுதி  அதை வெளியிடவும் செய்தான். ( கொஞ்சம் காசும்  சம்பாதிச்சான் ....) ' இருக்கலாம் , நீங்களும்  கூட உங்கள் மகிழ்ச்சியான  தருணங்களை ஆக்கப்பூர்வ  படைப்புகளாக்கலாமே,' என்று நான் கூறினேன் .
                   அவர்களிடமிருந்து  அடுத்த  கேள்வி வந்தது .  லே கல்லியேன் ஒரு விதிவிலக்கா ? அல்லது  பெரியவர்கள்  வேலையை  ஓரம்  கட்டுவார்களா? பதில் ஒரு  கேள்வியானது .  எந்தவிதமானவர்கள்  இயற்கையை  எதிர்கொள்ள  நேரம்  ஒதுக்குவார்கள் ?
                   'குழந்தைகள்'  என்றவர்கள் ,' குழந்தைகளைப் போன்றவர்களும்'  என்றனர். 'குழந்தையுள்ளம்  கொண்ட  எவரும் '  என்றான் இன்னொருவன் . பிறகு இந்த கேள்வி பிறந்தது .  குழந்தையுள்ளம்  என்பது என்ன ?  நாங்கள் அதற்கான விடையை  கரும்பலகையில் எழுதினோம்.
           அது, எப்போதும்  ஏதாவது செய்ய விரும்புவது 
            புதியன பற்றி எண்ணவும், கண்டுபிடிக்கவும்  விரும்புவது 
            எப்போதும் மகிழ்ச்சியாக  இருக்க விரும்புவது 
            யாராவது துன்பப்பட்டால் தெரிந்து கொள்வது.
            நண்பன் விரும்புகிற  எல்லாவற்றையும் , தானும்  விரும்புவது 
            ஏனெனில்  நண்பன்  இனிமையானவன் .
            பெரியவர்களை தனது கேள்வியால் எப்படி  துளைப்பது 
             என்பது பற்றியே  எப்போதும் எண்ணிக்கொண்டிருப்பது 
             குழந்தையுள்ளம்.
      ரொம்பவும் சத்தம் போடுவது, ஆனால் சிறிது  நேரம் உண்மையிலேயே  அமைதியாவது . தனக்கு விருப்பமானவற்றில்  நீண்ட நேரம்  வேலை  செய்யகூடியது, ரொம்ப தீவிரமா வேலை செய்து கொண்டிருக்கிறபோது  தொல்லைசெய்யப்  படுவதை விரும்புவதில்லை. பெரியவர்கள் இதை நம்புவதில்லை . அவற்றின் விளையாட்டு  பொம்மைகளிடமிருந்தும் கூட  அவர்கள் கற்கிறார்கள்.
      வீட்டுப்பாட  வேலையாக 'இயற்கை என்னை அணுகும்போது'  என்று எழுதுமாறு கூறிவிட்டு வகுப்பை முடித்தோம்.  குழந்தைகள் என்னை விட்டு வெளியேறிய பிறகு , நீண்ட நேரம் கரும்பலகையைப்  பார்த்துக்கொண்டே  நின்றேன். நானும் ஒரு காலத்தில் குழந்தையாக இருந்தவன் தானே.
                                               **********              ***********
 2001 ஜூலை  சண்டே எக்ஸ்பிரஸ்  பக்கம் 28 . மாற்றுமுறை பள்ளி ( Alternative schooling ) எனும் தலைப்பில்  அருணா ராகவன்  எழுதிய  கட்டுரையின் தமிழாக்கம். கட்டுரையாசிரியரை ( அருணா ராகவன் ) தொடர்புக்கொள்ள , அவது ஈ  மெயில் முகவரி actoust @ usnl . com .
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
பிக்மேலியன்ஸ் (PYGMALION ) என்ற சைப்ரஸ் நாட்டு மன்னன்  தனது  விருப்புக்கிசைந்த வகையில் ஒரு பெண்ணை  தந்தத்தினால்  செய்ய, அழகுக்கும் காதலுக்குமான  Abbrodite  என்கிற வீனஸ் தேவதையை  ஒத்த தேவதை அந்த சிலைக்கு உயிருட்டியதாக  கதை.
.....................................................................................................................................................................
சுந்தர சுகன் 2002 இல்  வந்தது.


              
                                      
                     
  


    

                 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக