நினைக்கிறேன் , நெகிழ்கிறேன்,
சினக்கிறேன்.......சிதைக்கிறேன்,
மோகாவேசமுருகிறேன்.............
மூர்க்கமாகிறேன், முத்தமிடுகிறேன்,
களிக்கிறேன் வியக்கிறேன்,
கரம் கூப்பி தொழுகிறேன்.
கை குலுக்கியும் மகிழ்கிறேன்.
இன்னும் என்னென்னவோ ஆன நான்
என்னென்னவானேன் என்று
எழுதுகிறேன்.
எழுத நேர்ந்தது
வாசிப்பில் நேர்கையில்
தேறினேன் நான்.
புரியலேன்'னா
புரிய சொல்லப் பயில்கிறேன்.
என் அலைவரிசையில்
பயணிக்க இறங்குவேன்.
நானே எழுதி நானே ரசிக்க;
கிறங்கி மயங்க
கழிவறை சுவரே போதும்.
வித்தையல்ல கவிதை , அது
விதை.
விளையும் நாளை ,
விளைவிக்கும்,
விளைந்தால் --தழைக்கும்
மானுடம்.
மேன்மையுறும், மென்மையுறும்.
உழுக்கலப்பையும் , துவக்கும்
ஆயுதங்கள் 'தான்.
கவிதை வல்லாயுதம்.
எமக்குத் தொழில் கவிதை என்றவன்
தெளிந்தவன்; வணிகன் அல்ல.
ஆதலினால், ஆதலினால்,
கவிதை செய்வீர் மானுடரே!
சினக்கிறேன்.......சிதைக்கிறேன்,
மோகாவேசமுருகிறேன்.............
மூர்க்கமாகிறேன், முத்தமிடுகிறேன்,
களிக்கிறேன் வியக்கிறேன்,
கரம் கூப்பி தொழுகிறேன்.
கை குலுக்கியும் மகிழ்கிறேன்.
இன்னும் என்னென்னவோ ஆன நான்
என்னென்னவானேன் என்று
எழுதுகிறேன்.
எழுத நேர்ந்தது
வாசிப்பில் நேர்கையில்
தேறினேன் நான்.
புரியலேன்'னா
புரிய சொல்லப் பயில்கிறேன்.
என் அலைவரிசையில்
பயணிக்க இறங்குவேன்.
நானே எழுதி நானே ரசிக்க;
கிறங்கி மயங்க
கழிவறை சுவரே போதும்.
வித்தையல்ல கவிதை , அது
விதை.
விளையும் நாளை ,
விளைவிக்கும்,
விளைந்தால் --தழைக்கும்
மானுடம்.
மேன்மையுறும், மென்மையுறும்.
உழுக்கலப்பையும் , துவக்கும்
ஆயுதங்கள் 'தான்.
கவிதை வல்லாயுதம்.
எமக்குத் தொழில் கவிதை என்றவன்
தெளிந்தவன்; வணிகன் அல்ல.
ஆதலினால், ஆதலினால்,
கவிதை செய்வீர் மானுடரே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக