' வங்கியில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் பணம்தான், என்னை கொள்ளை அடிக்க தூண்டியது' என்கிறான் ஒரு கொள்ளையன். இந்த சமாதானத்தை ஏற்று அவனை விட்டு விடுவோமோ, விடுவதில்லை. கொலையாளி ஒருவன்' தன்னால் கொலை செய்யப்பட்டவன் 'தான் என்னை கொலை செய்யுமாறு தூண்டினான்,' என்கிறான் . விடுவித்து விடுவோமா? முடியாது . கூடாது. உடலளவில் தண்டிப்பது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறபோதும் பல ஆசிரியர்கள் சற்றும் மனிதாபிமானமே இல்லாமல் மாணவர்களை தண்டிப்பதும் பதிவாகின்றன. அந்த மாணவர்கள் தாம் எம்மை அவ்வாறு தண்டிக்க தூண்டினார்கள் என்று ஆசிரியர்கள் சமாதானம் கூறினால் ஏற்றுக் கொள்ள முடியுமா? முடியாது.
பிறகு ஏன் கற்பழிப்பு வழக்குகளில் மட்டும் அத்தகைய சமாதனத்தை ஏற்க நினைக்கிறார்கள்? டெல்லியில் 23 வயதுப் பெண் கும்பல் கற்பழிப்புக்கு உட்பட்டாள் என்கிற அதிர்ச்சித் தகவலை தொடர்ந்து பல முகாம்களிலிருந்தும், குறிப்பாக போலிசிடமிருந்தும் இத்தகைய எதிர்வினையே எழுந்ததைக் காணலாம். இதைவிடவும் அதிர்ச்சி தரத்தக்கது என்னவென்றால் பெருமளவு பெண்களே , பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு பெண்கள்தாம் காரணம் என்று நினைப்பது தான்.
இத்தகைய மனபோக்கு நமது குடும்பதலைமை அமைப்பில் வேரோடியிருக்கிறது . அங்கே ஆண்களே எல்லா முடிவுகளையும் எடுக்கிறவனாகவும் , பெண் அவற்றுக்குக் கீழ்படிந்து, நடக்க விதித்தவளாகவும், தனக்காகவோ தாம் விரும்புகிற வகையிலோ வாழ நினைக்கிற எண்ணமேயில்லாதவளாகவும் தனக்கெதிரான துன்பங்களை தாமே வருவித்துக் கொள்வதாக நம்புகிறவளாகவும் இருக்கிறார்கள் . பிறகு வேறு என்ன நடக்கும்? பணிந்து போகிற பெண்கள் பிற பெண்களையும் பணிந்தே போகுமாறு வற்புறுத்துவார்கள்.
மகளைவிடவும் மகனுக்கே முக்கியத்துவம் தருகிற நமது குடும்பங்களிலிருந்தே இது தொடங்குகிறது. ஒரு பையனின் கெட்டநடத்தை 'ஆம்பிளப் புள்ளன்னா அப்படிதான் இருப்பான்' னு தள்ளுபடியாகும். அதனால்தான் ஆண்கள் வன்முறை உள்ளிட்ட எந்த தவறையும் செய்யலாம், ஏற்றுக் கொள்ளப்படும், வெளியே வந்துவிடலாம் என்று நினைகிறார்கள். ஏனெனில் அவர்கள் ஆண்கள். பெண்கள்தான் தமது வரையறையை அறிந்து நடக்க வேண்டியவர்களே
தவிர ஆண்கள் அல்ல என்று நினைக்கிறார்கள். பெண்கள் மீது குற்றம் சுமத்துகிற , பெண்களுக்கெதிரான சம்பவங்களை ஊக்குவிக்கிற இந்த மனப்போக்கு , நிச்சியமாக சொல்வேன், நமது வீடுகளில் நிலவுவதுதான்!.
ஒரு குடும்பத்துக்குள் ஒரு பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தால் அந்த பெண்ணுக்கு மிக நெருங்கிய உறவுக்காரியும் கூட அந்தத் தவறுக்கு பாதிககப்பட்ட பெண்தான் முழுபொறுப்பு என்று குற்றம் சுமத்தி அந்த பெண்ணின் மீது தவறான அபிப்ராயம் ஏற்படவும் செய்துவிடுவாள். இதனால் குற்ற உணர்வுக்கு ஆளாகிறவள் தனது சொந்த தாயிடமிருந்து கூட அதரவு பெற முடியதவளாகி, நம்பிக்கையிழந்து, மனச்சோர்வுக்கு ஆளாகி குற்றவாளிக்கு எதிராகப் புகார் சொல்லவும் திராணியற்றவள் ஆகிறாள்.
பெண்களின் பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் ஒரு எல்லை உண்டு. அதனை ஆண்கள் மீறச் செய்கிறார்கள். ஆண்களின் குற்றங்களுக்கு பெண்களை காரணம் காட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டிய தருணமிது. அவை ஒரு போதும் பெண்களின் குற்றங்கள் அல்லவே, அல்ல என்பதைப் பெண்களும் உணர்ந்து கொள்ள வேண்டிய நேரமிது. எவனொருவனுக்கும் பெண்ணுடைய அனுமதியில்லாமல் அவளைத் தொடக் கூட உரிமையில்லை, என்பதுடன் , அவளது உடல் மீதான உரிமையும் மதிப்பும் அவள் ஒருத்திக்கே சொந்தம். சற்றும் பயமின்றி பெண்கள் பேச வேண்டிய வேளை இது. பெண்கள் சினமூட்டப்பட்டுள்ள நேரமிது . எரிச்சலூட்டபட்டதற்கு எதிராக போராட வேண்டும்.
துணையாளாகக் கருதும் நிலை இந்தியாவிலிருந்து மலையேறி வெகுகாலமாகிவிட்டது. எல்லா பெண்களுக்குமான வேண்டுக்கோள் உங்களுக்காகவும், உங்கள் தோழியருக்காகவும் எழுந்து நில்லுங்கள். ஒரு பெண் துன்பத்திலிருப்பதைக் கண்டால் உடனே அவளது உதவிக்கு செல்லுங்கள். அந்த கூட்டத்திலிருக்கிற எல்லா பெண்களும் காரணமானவனை சூழ்ந்துக் கொள்ளுங்கள். அவன் ஒருபோதும் மறவாதப்படி சமுதாய பாடத்தை! கற்றுக் கொடுங்கள். இதை மட்டும் இதை மட்டுமே செய்ய தொடங்குங்கள்....அப்புறம் பாருங்கள் எளியவர்களை துன்புறுத்துகிறவர்கள் குறுகி நிற்பதை!
எளியவர்களை துன்புறுத்துகிறவன், பாதிக்கப்பட்டவர் அஞ்சுகிறவரைதான் தாக்குப்பிடிப்பான். பெண்களின் வலிமை எப்போதுமே குறைவாகவே மதிப்பிடப்பட்டுள்ளது. சக்தி உடல் தசைகளில் இல்லை. பழிவாங்குதலில் உள்ளது. ஒன்று சேர்வோம். இதற்கு ஒன்றும் பாராளுமன்றம் மசோதா தாக்கல் செய்ய வேண்டியது இல்லை. கற்றரிந்தவர்களாகத் தம்மை கூறி கொள்ளும் சிலர் இந்த சூழ்நிலைமைகளுக்கு பெண்கள் வரையறையின்றி உடுத்துவது தான் காரணம் என்று நம்புவார்களானால் அவர்களுக்கு இராமாயணத்திலிருந்து ஒரு நிகழ்வை நினைவூட்ட விரும்புகிறேன். ராவணனால் சீதை தூக்கிச் செல்லப்பட்டபோது ராமனிடமும் கொழுந்தன் லட்சுமணனிடமும் சில நகைகளைக் காட்டுகிறார்கள். லட்சுமணனால் காற்சிலம்பை மட்டும்தான் அடையாளம் காட்ட முடிந்தது. மரியாதை காரணமாக சீதையின் கால்களை மட்டுமே எப்போதும் பார்த்தவன் லட்சுமணன். இன்றைய ஆண்களிடம் இத்தகைய மரியாதை காணாமல் போய்விட்டது. சீதையை போல் இல்லை என்றும் ஒழுக்கம்தவறியவர்களாக இருக்கிறார்கள் என்றும் பெண்களை விமர்சிப்பதற்கு முன்பாக நீங்கள் உங்கள் மதிப்பையும் நற்பண்பையும் இழந்துவிட்டீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தி ஹிந்து 06/02/13
ஸ்நேஹா வர்கீஸ் .

எளியவர்களை துன்புறுத்துகிறவன், பாதிக்கப்பட்டவர் அஞ்சுகிறவரைதான் தாக்குப்பிடிப்பான். பெண்களின் வலிமை எப்போதுமே குறைவாகவே மதிப்பிடப்பட்டுள்ளது. சக்தி உடல் தசைகளில் இல்லை. பழிவாங்குதலில் உள்ளது. ஒன்று சேர்வோம். இதற்கு ஒன்றும் பாராளுமன்றம் மசோதா தாக்கல் செய்ய வேண்டியது இல்லை. அருமையான வரிகள். சிந்தித்து செயல் பட வேண்டிய நேரம் இது.
பதிலளிநீக்கு